A short summary of your project
- எமது தேனினும் இனிய தமிழ்மொழியையும், கண்களை ஒத்த நுண்கலைகளையும் எமது அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் பணியில் முன்னணியில் செயற்படுவதில் நாம் பெருமை அடைகின்றோம்.
- இலண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை அமைப்பதற்கு வேண்டிய பணிகளிற்கு நாம் எந்நாளும் துணை நிற்போம்.
Who are you?
- கீழைத்தேய நுண்கலை தமிழ்ப்பாடசாலை
- எமது கீழைத்தேய நுண்கலை தமிழ்ப்பாடசாலை Oriental Fine Arts Academy of London (OFAAL) என்று அழைக்கப்படும். இப்பாடசாலை இலண்டன் கீழைத்தேய நுண்கலை பரீட்சைச் சபையின் ஓர் அங்கமாகும். பல தரம் வாய்ந்த இலங்கை இந்திய நுண்கலை, தமிழ் ஆசிரியர்கள் எமது பாடசாலையில் பணியாற்றுகின்றார்கள். பாலர் வகுப்பு முதல் க. பொ. த உயர்தரம் வரை தமிழ்மொழியும், அனைத்து நுண்கலைகளும் இங்கே கற்பிக்கப்படுகின்றன.
Where will the money go?
- இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916 முதல் இருபது மொழிகளுள் ஒன்றாக நமது தாய்மொழியாம் தமிழ் மொழியும் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ் மொழிக்கென்று ஒரு நெடுங்கால வைப்புநிதி இல்லாததால், இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இந்த தமிழ்த்துறை இயங்காமல் உள்ளது. இந்த தமிழ்த்துறை மீண்டு அமைவதால், நமது பிள்ளைகள், தமிழை ஒரு பல்கலைக்கழக பாடமாக தங்கள் படிப்புகளில் படித்து, அதன் மதிப்பெண்களையும் தான் படித்துக்கொண்டிருக்கும் துறைகளில் சேர்க்க முடியும்.
- மேலும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை தமிழை முதன்மைப்படுத்தி படிக்க முடியும் என்பதால், நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் ஐரோப்பாவிலே தமிழில் உயர்கல்வி கற்க முடியும். இது ஐரோப்பாவில் இயங்கிவரும் பல்வேறு தமிழ்ப் பள்ளிகளின் பாடசாலைக்கு எதிர்காலத்தில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் முக்கிய துறையாக அமையும். எனவே, கரோ வாழும் தமிழர்கள், இந்த தமிழ்த்துறைக்கு தன்னால் இயன்ற நன்கொடைகளை வழங்கி, தமிழ்த்துறை வைப்புநிதியில் உங்கள் பெயரையும், வாழ்த்து செய்தியையும் இணைக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.
- இலண்டன் தமிழ்த்துறை பற்றிய மேலதிக தகவல்களை எங்கள் இணையதளத்தில் http://www.tamilstudiesuk.org இல் அறிந்து கொள்ளலாம்.
- திரட்டப்பட்ட அனைத்து நிதிகளும் SOAS தமிழ்த்துறையின் நெடுங்கால வைப்புநிதியில் இணைக்கப்படும்.
- இணைப்பு: https://soas.hubbub.net/p/TamilStudies/
Rewards
Images and video



Contact Us
M T Selvarajah – 07393 203 387
Mrs Primine Vimaladasa – 07799 665 769
Website: https://www.ofaal.education
Help us succeed!
- இம் முயற்சிக்கு எல்லோரும் உங்களால் இயன்ற பங்களிப்பை செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்ளுகிறோம்.
- Please sponsor us and help make this happen.