By
Tamil Studies UK
Germany
இலண்டன் பல்கலைக்கழகம் SOAS இல் அமையவிருக்கும் தமிழ்த்துறைக்கு யேர்மனியில் பரவி வாழும் தமிழர்களின் பங்களிப்பை இந்த நிதித்திரட்டல் மூலம் "வணக்கம் யேர்மனி" ஒருங்கிணைப்புக் குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறோம்.
யேர்மனியின் பரவி வாழ்ந்து, பல்வேறு வகையான தமிழ்ப்பணிகளை முன்னெடுத்து வரும் தமிழ் ஆர்வலர்களின் கூட்டு முயற்சியே இந்த நிதித்திரட்டல்.
இலண்டன் பல்கலைக்கழகத்தில் 1916 முதல் இருபது மொழிகளுள் ஒன்றாக நமது தாய்மொழியாம் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ் மொழிக்கென்று ஒரு நெடுங்கால வைப்புநிதி இல்லாததால், இரண்டாயிரமாம் ஆண்டுக்கு பிற்பகுதியில் இந்த தமிழ்த்துறை இயங்காமல் உள்ளது. இந்த தமிழ்த்துறை மீண்டு அமைவதால், யேர்மனியில் இருந்து இலண்டனில் பல்வேறு படிப்புகளுக்கும் வரும் நமது பிள்ளைகள், தமிழை ஒரு பல்கலைக்கழக பாடமாக தங்கள் படிப்புகளில் படித்து, அதன் மதிப்பெண்களையும் தான் படித்துக்கொண்டிருக்கும் துறைகளில் சேர்க்க முடியும்.
மேலும் இலண்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை தமிழை முதன்மைப்படுத்தி படிக்க முடியும் என்பதால், நமது பிள்ளைகள் எதிர்காலத்தில் ஐரோப்பாவிலே தமிழில் உயர்கல்வி கற்க முடியும். இது ஐரோப்பாவில் இயங்கிவரும் பல்வேறு தமிழ்ப் பள்ளிகளின் பாடசாலைக்கு எதிர்காலத்தில் கற்பிக்கும் தமிழ் ஆசிரியர்களை உருவாக்கும் முக்கிய துறையாக அமையும். எனவே, யேர்மனியில் வாழும் தமிழர்கள், இந்த தமிழ்த்துறைக்கு தன்னால் இயன்ற நன்கொடைகளை வழங்கி, தமிழ்த்துறை வைப்புநிதியில் உங்கள் பெயரையும், வாழ்த்து செய்தியையும் இணைக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.
திரட்டப்பட்ட அனைத்து நிதிகளும் SOAS தமிழ்த்துறையின் நெடுங்கால வைப்புநிதியில் இணைக்கப்படும். இணைப்பு: https://soas.hubbub.net/p/TamilStudies/
E-Certificates will be issued to all donors by TamilStudiesUK.
You can reach us at contact@tamilstudiesuk.org, or our website: www.tamilstudiesuk.org
Select this reward if you just want to donate to the project without receiving a reward.
0 claimed
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 June 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 June 2021
E-Certificate
0 claimed
Estimated delivery: 1 June 2021
E-Certificate TamilStudiesUK Philanthropist (More info: http://tamilstudiesuk.org/philanthropists/)
0 claimed
Estimated delivery: 1 June 2021